நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

மோட்டார் சைக்கிள் விபத்து குடும்பஸ்தர் பலி

Tuesday, March 30, 2010

பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் இரண்டு மோட் டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் ஒருவர் மரணமடைந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து கரவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் நெல்லியடியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கரவெட்டி நோக்கிச் சென்று கொண் டிருந்த துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழிய ரான ஒரு பிள்ளையின் தந்தையான ச.சந்திர குமார் (வயது-32) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இவருடன் பயணித்த போக்குவரத்துச் சபை ஊழியரான க.ரஜித்குமார் (வயது-27) என்பவர் மயக்கமுற்ற நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மற்றைய மோட்டார் சைக் கிளில் சென்ற தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த சபாரட்ணக் குருக்கள் ரஜேந்திரதேசி கர் (வயது-21) படுகாயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

டெங்கு நோயினால் பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் மரணம்

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

மிசரி, வரணியைச் சேர்ந்த தவமொறிஸ் சுஜிந்தா (வயது-28) என்ற இளம் பெண் ணே உயிரிழந்தவராவார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரஸ்தாப யுவதி நேற்று முன்தினம் இரவு 8.45 யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அவர் உயிரிழந்ததாக வைத் தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ். வட்டுக்கோட்டையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Saturday, March 20, 2010

யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டை பகுதியில் கள்ளுத் தவறணையில் கைக்குண்டுடன் நின்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை – மூளாய் வீதியில் அமைந்துள்ள கள்ளுத் தவறணை ஒன்றில் கைப்பையுடன் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நின்றிருந்தார்.

அச்சமயம் மது பரிசோதனைக்காக அங்கு வந்திருந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இவரிடம் கைப்பையில் கசிப்பு இருக்கின்றதா எனச் சந்தேகித்து பரிசோதித்த போது, அதற்குள் கைக்குண்டு ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

உடனே வட்டுக்கோட்டைப் பிரதேசபொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. உடனடியாகவே ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டதுடன் அந்நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தொல்புரம், முன்கோட்டையைச் சேர்ந்த எஸ்.மகேந்திரம் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இவர் ஏன் கைக்குண்டு வைத்திருந்தார் என்பது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மாவிட்டபுரக் கந்தா! கண் திறந்து பார்! : யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைவரம்

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.

நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது. குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்.

'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்.

ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.

தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை. வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை. ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்!

தமிழ் தெய்வத்தின் இருப்பிடத்தில் தமிழ்மொழி இருட்டடிப்பு

தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.

உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு.

ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.

இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது.

இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது. அவசரமானது.

அது சரி. இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா? ஒருவேளை கண்டும் காணாமல்.....

ஆலய வரலாறு

அது போகட்டும். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம்.

யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9 மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம்.

சோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவல்லிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.

மாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

வடக்கு எல்லையில் காங்கேசன்துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம்.

தமிழக முருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார்.

மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்?

நன்றி: வீரகேசரி

எதிர்வரும் மே மாதம் யாழ்ப்பாணத்தில் இந்தி தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு திட்டம்

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை திறக்கும் முயற்சிகளை இந்திய அரசு விரைவுபடுத்தி வருவதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதிகளை சிறீலங்கா அரசிடம் இருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மே மாதம் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் நுளைவு அனுமதி அலுவலகம் ஒன்றை திறந்துவைக்க உள்ளதாக இந்திய தூரகம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிறீலங்கா வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமாராவ் இது தொடர்பில் சிறீலங்கா அரச தலைவருடன் பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி வரையிலுமான தொடரூந்து பாதைகளை அமைப்பதற்கு இந்தியாவும், சிறீலங்காவும் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி வழங்க முன்வந்துள்ளது.

திகிலான அனுபவங்கள், கனவுகளுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

Thursday, March 18, 2010

தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ஒருவன் தனது குடும்பத்தினரையும் இரண்டு கால்களையும் இழந்திருந்தான். பெண்ணொருவர் தனது குடும்பத்தை இழந்திருந்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பியிருந்தனர். ஆனால், நீண்ட காலம் அவர்கள் இருக்கவில்லை. “ஏனையவர்கள் போன்று எம்மால் வாழமுடியாது…

இவ்வாறு அவர்கள் எழுதிவைத்த தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 345 மாணவர்கள் தமது வாழ்க்கையைக் மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றனர். விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த போது, அவர்கள் மோதலின் இடையே சிக்கியிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு அவர்களால் திரும்பிச் செல்லமுடியவில்லை. அந்த மாணவர்களில் சுமார் 12 பேர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையுடன் கதைத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் அதற்கு வெளியேயும் கடந்த வாரம் அவர்கள் இந்துஸ்தான் டைம்ஸுடன் கதைத்ததாக சுதிர்த்தோ பற்றா நோபிஸ் என்ற நிருபர் அந்தப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

அப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

2007 – 2008 காலப்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் இரவு, பகலாக பதுங்கு குழிக்குள் கழித்த நாட்கள், யுத்த விமானம், ஆட்லறி ஷெல்கள் என்பவை யுத்தத்தின் போது கிரமமாக தாக்குதல் நடத்தியமை, குடும்ப உறுப்பினர்களை இழந்தமை போன்ற திகில் நிறைந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சில பையன்கள் புலிகளினால் படையணிக்குச் சேர்க்கப்பட்டு 2 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்ட பின் அவர்களுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி கொடுக்கப்பட்டது. புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காக சில பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர். நந்து என்ற பெண் கூறுகையில்;

புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்கு ஒன்றில் திருமணம் செய்திருக்க வேண்டும் அல்லது காயமடைந்திருக்க வேண்டுமென்று தெரிவித்தார். அவருக்கு பிள்ளை ஒன்று உள்ளது. “நாங்கள் மரணத்தின் நிழலில் வாழ்ந்தோம். ஒருநாள் முள்ளிவாய்க்காலில் ஆஸ்பத்திரி மீது ஷெல் வந்து விழுந்தது. நாம் இருந்த பதுங்கு குழிக்கருகே அச்ஷெல் விழுந்தது. 60 க்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்று யசோதா என்ற பெண் கூறினார். கலை பீடத்தைச் சேர்ந்த அந்த மாணவி ஒரு குழந்தையின் தாயாவார்.

2009 மே இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் மாதக்கணக்காக அரசாங்கத்தின் முகாம்களில் இந்த மாணவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பல்கலைக்கழக அதிகாரிகள் அதன் பின் அவர்களை விடுவித்திருந்தனர். இந்த மாணவர்களில் அநேகமானவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகும். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்த இரண்டு மாவட்டங்களும் இடிபாடுகள் நிறைந்த இடங்களாக மாறிவிட்டன. விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த சந்தேகத்தில் மாணவர் ஒருவர் இராணுவ தடுப்பு முகாமில் இருந்திருக்கிறார். மாதக்கணக்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தலைகீழாகக் கட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பிளாஸ்டிக் பைகளால் தனது தலை கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பின் ஜோன் என்பவர் மற்றொரு புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இலங்கைக் கொடியை எவ்வாறு ஏற்றுவது என்பது தொடர்பாக அவருக்குப் படிப்பிக்கப்பட்டது. அவர்கள் எமது மனதை மாற்ற விரும்பினார்கள் என்று அவர் கூறினார். நாதன், அக்பர் போன்ற பல மாணவர்களுக்கு ஷெல் காயங்கள் ஏற்பட்டன. பாரிய சத்தம் அதிகளவு வெளிச்சம் என்பனவற்றால் நாதன் அவ்வப்போது நினைவை இழந்துவிடுகிறார்.

இந்த மாணவர்களின் பலரின் கனவானது வெளிநாட்டிற்குச் சென்று சிறப்பான வாழ்க்கையை நடத்துவதாகும். ஆனால், இழந்த வருடங்களை அவர்களால் மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா?

இரண்டு மூன்று வருடங்களாக தமது கல்வியாண்டுகளை அவர்கள இழந்துவிட்டனர். ஆனால், அவர்கள் கெட்டிக்காரர்கள். கடுமையாகப் படிக்க முயற்சிக்கின்றனர் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம் தெரிவித்தார்.

கடந்த காலத்தைக் கடந்து எதிர்காலத்தை நோக்கி முன்நகர்ந்து சென்றால் அவர்களால் கல்வியில் இழந்த வருடங்களை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.

(சகல மாணவர்களின் பெயர்கள் இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.)

யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு அரசியல் சாயம் பூசி, எங்களை அவதிக்குள்ளாக்காதீர்கள்! : -யாழ். பல்கலை. மாணவர்கள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு தொடர்பாக அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தங்களுக்குச் சாதகமாகவும், தான்தோன்றித்தனமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் கட்சி ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்திரிகைகளில் இச்செய்தி வெளியாகியிருந்தது.

அரசியல் தலையீடுகளினால் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் யாவரும் அறிந்ததே. பல மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் கடத்திச்செல்லப்பட்டனர். பலர் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக தங்கள் கல்வியைத் தொடர முடியாமல் இடைநடுவே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டமையும் அனைவரும் அறிந்ததே.

தற்போது ஒரு சுமுக நிலை தோன்ற ஆரம்பித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் அரசியல் சாயம் பூசி, மீண்டும் அவர்களை சிக்கல்களில் மாட்டிவிடும் விதமாக அரசியல்வாதிகள் செயற்பட வேண்டாம் என பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அரசியல்வாதிகள் தங்களின் கொள்கைகளை நேர்மையாக மக்கள் மத்தியில் முன்வைக்கும் போது, தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக எமது பெற்றோர்கள் தீர்மானிப்பார்கள்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது ஒரு சில மாணவர்கள் மட்டும் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும். அவர்களின் கருத்து முழு பலகலைக்கழக மாணவர்களின் கருத்தல்ல என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மாணவர்களாகிய நாம் எமது கல்வியில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது இவ்வேளையில், எங்களை அரசியல் சகதிக்குள் இழுத்து, எங்கள் கல்வியை பாழாக்காதீர்கள் என அனைத்து அரசியல்வாதிகளிடமும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

-யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

பையில் கொண்டு சென்ற பணத்தை அறுத்தெடுத்தனர் கொள்ளையர்கள்!

Tuesday, March 16, 2010

வங்கியில் வைப்பிலிடுவதற்காகப் பை ஒன்றினுள் கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது

அளவெட்டியிலிருந்து யாழ். நோக்கி வானில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது;

தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்த ஒரு தொகை பணத்தை வங்கியில் வைப்பிலிடுவ தற்காக அளவெட்டியிலிருந்து வானில் பெண் ஒருவர் கொண்டு வந்துள்ளார்.

அதன்போது சனநெரிசலைப் பயன்படுத்திப் பணத்தினைக் கொண்டு வந்த பையினை அறுத்து அதிலிருந்த சுமர் 80 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

யாழ்.நகர்ப் பகுதியில் வானிலிருந்து இறங்கியபோதே தனது பணம் கொள்ளையிடப்பட்டிருந்தமை தெரிய வந்தமை தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது முறைப்பாட்டை ஏற்கப் பொலிஸார் மறுத்ததாகவும் கூறப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீதித்தடைகள் நீக்கம்

யாழ். குடா நாட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை துதல் முற்றாக அகற்றப்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் ]மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பிரதேச பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடும் நோக்கத்திலேயே இராணுவத்தினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த இராணுவ பேச்சாளர் தற்போது பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியும் என்றும் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது:-

மிக நீண்ட காலமாகவே யாழ்.குடாநாட்டில் பாதுகாப்புக்கென வீதித் தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் போன்றன அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த வீதித் தடைகள் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் யாழ்ப்பாணத்தின் நிலைமை தற்போது மாற்றமடைந்துள்ளது.

வீதித் தடைகளினால் இதுவரை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்ற பொதுமக்கள் இனி எவ்வித தடையுமின்றி வீதிகளில் போக்குவரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதித் தடைகள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. என்றார்.

யாழ். தென்மராட்சியில் வர்த்தகரின் மகனான மாணவன் கடத்தல்

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மீசாலை, மடத்தடி என்னுமிடத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகர் ஒருவரின் மகனான மாணவன் ஒருவர் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார் என யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு மூன்று கோடி ரூபா பணம் கப்பமாக வழங்கப்படவேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவராவார்.

வடபகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் இடம்பெற்றுள்ள முதலாவது கடத்தல் சம்பவம் இதுவென்றும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண மக்களை அறிய ஏழு பிறப்பு எடுக்க வேண்டும்

Monday, March 15, 2010

2010 ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவர். யார் தோற்பர் என்ற எதிர்வுகூறல்கள் எது வும் நமக்கு வேண்டியதில்லை. இப்போதெல்லாம் எவர் அமைதியாகத் தானுண்டு தன் பணியுண்டு என வாழ்கிறார்களோ அவர்களைத்தான் மக்கள் சமூகம் ஓரள வேனும் மதிக்க முற்படுகின்றது.

இந்நிலை யாழ்ப்பாணத்தில் மிக உச்சம் எனலாம். யாழ்ப்பாண மக்களைப் பற்றி அறிந்து கொள்வதெனில் அதற்கு ஒரு ஆயுள்காலம் போதாது. குறைந்தது ஏழு பிறப்பெடுத்தால் மட்டுமே யாழ்ப்பாண மக்களின் தன்மையைத் புரிந்து கொள்ள முடியும். சில வேளை ஏழாவது பிறப் பிலும் இது சாத்தியமாகாது போகலாம்.

இதற்கு நல்ல உதாரணம், நடைபெறப் போகும் பொதுத் தேர்தல். யாழ்.மாவட்ட நாடாளு மன்றத் தேர்தலில் ஏகப்பட்டவர்கள் அரசியல் கட்சி என்ற நிலையிலும், சுயேட்சைக் குழுக் கள் என்ற அடிப்படையிலும் போட்டியிடுகின் றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் போட்டியி டும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், சுயேட் சைக் குழுக்களும் தங்களுக்கு நாடாளுமன்ற ஆசனம் கிடைக்கும் என வெளிப்படையாகக் கூறிக் கொள்கின்றன. யாழ்ப்பாண மக்கள் யாரைக் கண்டாலும் உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு என்று கூறிக் கொள்வது கூட இவ்வாறு அவர்கள் நம்புவதற்குக் காரணமாகலாம்.

யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாரையும் முகம் முறித்துப் பேச மாட் டார்கள். தங்கள் வீட்டிற்கு எந்த வேட்பாளர் வந்தாலும் வாருங்கள், இருங்கள், உங்களை சற்று முன்பும் நினைத்தோம், ஏகப்பட்டவர்கள் உங்களைத்தான் ஆதரிக்கின்றார்கள்.

உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி னால்தான் எங்கள் பிரச்சினை தீரும் என்று என்னுடைய கந்தோரிலும் கதைத்தார்கள். நூற்றுஐம்பது வாக்குகளைக் கூட பெற முடி யாத வேட்பாளருக்கு எங்கள் வாக்காளப் பெரு மக்கள் சொல்லும் கதைதான் இது. வாக்காளரும் வேட்பாளரும் சந்தித்தால் நடைபெறும் சம்பா ணையாக இது இருந் தால், வாக்காளரும், வாக்காளரும் சந்தித்தால் எப்படி கதைப்பார்கள் தெரியுமா?

போட்டியிடும் வேட்பாளரின் பெயரைக் குறிப் பிட்டு இவரும் எலக் ன் கேட்கின்றார் என்று கூறி ஒரு சில விரசக் கதைகளும் சொல்லி சிரித்து மகிழ்வர்.எப்படி இருக்கின்றது நிலைமை? கற்பனை சாகரத்தில் வேட்பாளர்கள். வயிறு குலுங்கச் சிரிக்கின்றார்கள் வாக்காளர்கள்.

நீங்களும் கேட்டிருக்கலாமே என்று சிரிப்பின் உச்சத்தில் சொல்லி மகிழ்கின்றார்கள். இந்த மகிழ்வை மட்டுமே எங்கள் வேட்பாளர் களால் கொடுக்க முடியும். அதுபோதுமையா, தோற்றாலும் பரவாயில்லை.

மகிந்த, ரணில் மற்றும் சம்பந்தன் பிரசாரம் செய்ய யாழ். வருவர்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை யாழ்ப் பாணத்தில் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகி யோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு நாளை வரும் இரா. சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கான பிரசார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார்.
யாழ்.வரும் அவர், தனது கட்சி வேட்பா ளர்களின் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.

உல்லாசப் பயணிகளுக்கென யாழ்ப்பாணத்தில் விசேட கரும பீடம்

Sunday, March 14, 2010

வட மாகாணத்திற்கான உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் உல்லாசப்பயணத்துறையும் இலங்கை பாதுகாப்புப் படையினரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் விசேட கரும பீடம் ஒன்றை திறந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள இந்த கருமபீடத்தின் ஊடாக உல்லாசப்பணிகளுக்கு வேண்டிய சகல தகவல்களையும் பெறமுடியும் என உல்லாசப்பயணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ9 வீதி போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டதன் பின்னர் கடந்த இரு மாதங்களில் மட்டும் 3 லட்சம் வரையிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் யாழ்பாணக் குடாநாட்டில் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளோர் விவசாயிகள் வர்த்தகர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மேலதிக வருமானத்தைப் பெறக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மரக்கறி பழவகைகள் கைப்பணிப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் அதிக லாபத்தை பெறக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட பகுதிக்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே வர்த்த நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வர்த்தக கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2010 என்ற பெயரிலான இந்த கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில் இந்திய வர்த்தகர்களும் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.