எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரத்து 303 வாக்காளர் கள் விண்ணப்பித்துள்ளதாக யாழ். தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் 7 ஆயிரத்து 482 விண்ணப்பங் கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 821 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.
இவ் விண்ணப்பங்கள் அனைத்தும் யாழ். மாவட்டத்தில் 143 அத்தாட்சிப்படுத்தும் அலு வலர்கள் மூலமும் வெளிமாவட்டங்களிலிருந்து 119 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்படி அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்க ளுக்கான பயிற்சி வகுப்புக்கள் யாவும் எதிர்வரும் 15ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் எனவும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தயாரிக்கப்படவுள்ள வாக்காளர் இடாப்புக்கள் எதிர்வரும் 10ஆம் திகதி கட்சிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும்,
அத்துடன் தபால் மூல வாக்களிப்பிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் காப்புறுதி செய்யப்பட்ட பொதிகள் மூலம் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் அந்தந்த திணைக்களத்தைச் சேர்ந்த உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள தாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது..
0 கருத்துரைகள்:
Post a Comment