நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் முதல் அனைத்துலக வர்த்தக கண்காட்சி

Friday, March 5, 2010

யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 18 முதல் 20 வரை நடக்கவிருக்கும் முதல் அனைத்துலக வர்த்தக கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் யாழ்ப்பாண பொது நூலகத்தில் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜனால் திறந்து வைக்கப்பட உள்ள இந்த கண்காட்சியில் சுமார் 45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் என்று யாழ்ப்பாண தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவர் பூரணச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

20 இந்திய நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை ஏற்கெனவே உறுதி செய்து விட்டதாகவும் அவர்கள் இயந்திரங்களை கண்காட்சியில் வைப்பார்கள் என்றும் தெரிவித்தார். வேளாண்மை மற்றும் கடல் உணவு தயாரிப்பிற்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்காட்சி மற்றும் மாநாட்டுப் பணிகளின் இயக்குனர் இம்ரான் ஹசன் கூறுகையில் பூரணச்சந்திரனும் தானும் இணைந்து யாழ்ப்பாண கண்காட்சியை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை, கர்நாடகா, கேரளா போன்ற இடங்களில் மாதிரி காட்சிகளை முன்கூட்டியே நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய அரசு மற்றும் தனியார் துறைகளிலிருந்து மிக பெரிய அளவில் பதில் கிடைத்துள்ளதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் மேம்பாட்டு திட்டங்களுக்கு இது ஒரு வரவேற்க்கதக்க ஊக்குவிப்பு என்றும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment