நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாணத்திற்கு இரு மாதங்களில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்

Friday, March 5, 2010

இந்த ஆண்டின் தொடக்க மாதங்களான ஜனவரி மற்றும் பெப்ரவரியில் மட்டும் சிறிலங்காவின் வடக்கு பகுதிக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு சுமார் 3 மில்லியன் [முப்பது இலட்சம்] உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னான இந்த அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகை யாழ்ப்பாணத்தில் இருக்கும் வர்த்தகர்களுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தியதுடன் மிக அதிக அளவு வருமானம் பெறக்கூடிய வாய்ப்புக்களையும் உறுதிப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் உணவுப்பொருட்கள், அலங்கார ஆபரண பொருட்கள், மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற சிறுதொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு பகுதியின் புகழ் பெற்ற பொருட்களான கடல் உணவு வகைகள், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்றவற்றை வாங்குவதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வடக்கு பகுதியில் அதிகபடியான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் அப்பகுதியின் சுற்றுச்சூழல், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மிக பழமையான நினைவு சின்னங்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலாத் துறை அமைச்சர் அசல ஜகோடா [Tourism Minister Achala Jagoda] தன் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுலாத்துறை மட்டுமின்றி மீன்வளம், பாதுகாப்பு, கலாச்சாரம், தேசிய உரிமைகள் மற்றும் நாட்டின் பிற துறை அமைச்சர்களும் இணைந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து கொடுக்கவும் அதே நேரத்தில் சுற்றுசூழல் மற்றும் தொல்பொருள் நினைவு சின்னங்களை பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment