வெளிநாட்டு றோலர் படகுகள் வடபகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடபகுதி மீனவர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக யாழ்ப்பாண மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்தியாவிலிருந்து தினமும் றோலர் படகுகள் பெருமளவில் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது மீனவர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பதாக சங்கத்தின் தலைவர் ரி.தவரத்னம் குளோபல் தமிழ் நியூஸிற்குத் தெரிவித்தார்.
நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம், அரசாங்கம் விதித்திருந்த தடை என்பன காரணமாக வடபகுதி மீனவர்கள் நீண்டகாலமாக தமது தொழில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது.
நேற்றைய தினம் இந்திய றோலர் படகுகள் மண்டதீவு வரை வந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுபெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் இரண்டு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபடக் கூடும்.
யுத்த காலத்திலும்கூட இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்து மீன்வளங்களை அள்ளிச் சென்றனர்.
வடபகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாததால் அமைதியாக இருந்தனர். எனினும், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. தடைகளும் நீக்கப்பட்டுளள்ன. தற்போதுகூட வெளிநாட்டுப் படகுகளுக்கு இடமளித்துவிட்டு வெறுமையாக இருக்க வேண்டுமா? இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண்பது அவசியம் எனவும் தவரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment