யாழ்.நகரப்பகுதியின் பல இடங்களிலும் தங்கியிருந்து வீதியால் செல்பவர்களை பலவந்தமாக அழைத்து சோதிடம் என்று பொய் கூறி பணம் வசூலித்து ஏமாற்றி வந்தவர்களை யாழ்ப்பாணப் பொலி ஸார் கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 2 ஆம்திகதி கைது செய்யப்பட்ட 9 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்றைய தினம் யாழ். நீதிமன் றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலையானார்கள்.
கைதான 19 பேரில் பெற்றோர்களால் அழைத்து வரப்பட்ட 6 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர். ஏ-9 பாதையினூடாக வெளியிடங்களிலிருந்து வந்த பலர் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பி டத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment