நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்.குடாநாட்டு வாக்காளர்கள் சொந்த மண்ணிற்கு வந்து வாக்களிக்க வேண்டும் - திருமதி மகேஸ்வரன்

Thursday, March 4, 2010

வெளிமாவட்டங்களில் வசிக்கும் குடாநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்களர்கள் சொந்த மண்ணுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறானவர்களுக்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். என யாழ்.மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இவ்வேண்டுகோளை வலியுறுத்தி அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட்டு தமிழ் மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப்பீடம் ஏற்றுவதே ஒரே வழியாகும். இதற்கான பாதையை யாழ்.குடாநாட்டு மக்கள் ஏற்படுத்த வேண்டும். குடாநாட்டு மக்கள் சிந்தித்து உரிய முறையில் வாக்களித்தால் ஐ.தே.கவின் சார்பில் 6 உறுப்பினர்கள் குடாநாட்டில் இருந்து தெரிவாவது உறுதி.

யாழ்.குடாநாட்டில் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழரை இலட்சமாக இருந்த போதிலும் இங்கு வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் வாக்காளர்களாக பதிவு செய்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் இடம் பெயர்ந்து குடியேறியுள்ளனர். இத்தகையவர்கள் நாடாளுமன்றத் தேர்தலின் போது குடாநாட்டுக்கு வந்து தமது வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலமே எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும்.

குடாநாட்டு மக்கள் இதுவரை சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்தனர். தற்பொழுதும் குடாநாட்டு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவே இந்தத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பதன் மூலமே சுபீட்சமான வாழ்வுக்கு குடாநாட்டு மக்கள் அத்திபாரம் இடமுடியும். இது தான் உண்மையும் யாதார்த்தமுமாகும்.

மக்கள் வாக்குகளைச் சிதறிடிக்காமல் வாக்களித்து எமது அணியலிருந்து 6 உறுப்பினர்களைத் தெரிவு செய்தால் அது ஆட்சி மாற்றத்துக்கான அத்திபாரமாக அமையும்.
இத்தகைய நிலை ஏற்பட வேண்டுமானால் குடாநாட்டில் உள்ள மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். குடாநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்களர்கள் சொந்த மண்ணுக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிடுபவர்களில் அதிக எண்ணிக்கையான தமிழ் உறுப்பினர்கள் யாழ்.குடாநாட்டிலேயே தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பில் கூட ஐ.தே.கவின் சார்பில் தமிழ் வேட்பாளர்கள் எவரும் நிறுத்தப்படவில்லை. எனவே யாழ்ப்பாணத்தில் இருந்தே ஐ.தே. கவிற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே யாழ்.குடாநாட்டில் வாக்காளர் பதிவைக் கொண்ட மக்கள் அங்கு வந்து வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் அதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நாம் தயாராக உள்ளோம்.

தமிழ் மக்களுக்காக எனது கணவர் உயிரை இழந்தார். நான் இன்று அவரைப் பிரிந்த பெரும் துயரத்தில் இருந்து மீளமுடியாது தவிக்கின்றேன். எனது நிலையில் குடாநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையான பெண்கள் உள்ளனர். எனவே இந்தத் தேர்தலின் பின்னராவது இத்தகையவர்களின் துன்ப துயரங்கள் நீங்க வேண்டும். குடும்பத்தில் கணவனை இழந்த எனக்கு ஏனைய குடும்பங்களில் ஏற்பட்ட இழப்புக்களின் சுமை தெரியும்.

எனவே எனது அணியினரை வெற்றி பெறச் செய்ய சகல மக்களும் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் மக்களின் நலன் குறித்து எனது கணவர் நாள்தோறும் சிந்தித்தார். நாம் தமிழ் மக்களுக்கு துன்பம் ஏற்படும் போது அவர்களை விட்டுவிட்டு வெளிநாடு செல்பவர்கள் அல்லர். எனவே மக்கள் இம் முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் விட்ட தவறை இன்று உணர்கின்றோம். அதேபோன்று இம்முறைத் தேர்தலிலும் குடாநாட்டு தமிழ் மக்கள் தவறிழைத்து விடக்கூடாது என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment