
தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தென்பகுதியிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்குரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
யாழ்.புகையிரத நிலையம், யாழ்.பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள பழைய மேல் நீதிமன்றக் கட்டிடமும்,சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நயினாதீவு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கா குறிகாட்டுவானில் குடி தண்ணீர், மலசலகூட வசதி, வாகனத் தரிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறிகாட்டுவானில் பயணிகளின் நலன் கருதி பொலிஸார் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளதுடன், கடற்படையினரும் ஓத்துழைப்பு வழங்குகின்றனர் என யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment