நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்குடாநாடு செல்லும் ஊடகவியலாளர்கள் மீது அழுத்தங்கள்

Monday, March 8, 2010

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றல், யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை அறிவதற்காக அங்கு செல்ல தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் தடை ஏற்படுத்துவதால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையை அங்கீகரிக்குமாறு எவரும் தமக்கு ஆலோசனைகளை வழங்கவில்லை எனவும் இதனால் செய்தி சேகரிக்க இடமளிக்க முடியாது எனவும் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கடந்த மாதம் 28ம் திகதி நைனாதீவு
பிரதேசத்திற்குச் சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் முதலாம் திகதி ஏ-9 வீதியின் இரு புறங்களிலும் மீள்குடியேற்ற பணிகள் தொடர்பாக தகவல் சேகரிக்கச் சென்ற அந்த ஊடகவியலாளரிடம் உரையாடியுள்ள இராணுவ வீரர் ஒருவர், இராணுவத் தலைமையகத்தின் எழுத்துமூலமான அனுமதியைக் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.

கடற்படையினரும் இராணுவத்தினரும் ஊடக அடையாள அட்டை குறித்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் குறித்து அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவிடம் கேட்டபோது, வருடாவருடம் ஊடக அடையாள அட்டைகளை வெளியிட முன்னர் அவற்றின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சு, காவல்துறை திணைக்களம், கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியவற்றுக்கு அனுப்பி அவற்றுக்கு மதிப்பளிக்குமாறு எழுத்துமூலம் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கும் எந்த ஊடகவியலாளரையும் கௌரவமாக கவனிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கடற்படை மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment