வடமாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விசாரணைக்காக மக்கள் ஆணைக் குழு இன்றும் நாளையும் (செவ்வாய்த புதன்) யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாநகரசபை உறுப்பினரும் மக்கள் பணிமனைத் தலை வருமான மெளலவி பி.ஏ.எஸ். சுபியான் தெரிவித்துள்ளார்.
இவ் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஓய்வுபெற்ற உயர் நீதியரசர் அப்துல் மஜீத்த முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் கலா நிதி யோசய்யா உட்பட மேலும் பல பிரதிநிதிகள் வருகை தரவுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் மற்றம் ஏனைய சமூகங் களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்குமுள்ள உறவுகள்த மீள்குடியேற்றத்தில் எதிர்கொள் ளும் சவால்கள்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பல தரப்பின ருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இவ் ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றும் நாளையும் மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையும் நாவலர் வீதியில் அமைந்துள்ள யாழ். கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மத்திய நிலையமாக விளங்குகின்ற மக்கள் பணிமனையில் 2 கட்டங்களாக நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment