
திருநெல்வேலி சந்திப்பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசமடைந்துள்ளன.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடையினுள் அடுக்கப்பட்டிருந்த தீப்பெட்டி பற்றியதாலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வேளையில் திருநெல்வேலிப் பகுதி யில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞர்களின் உதவியுடன் தீயணைக் கப்பட்டதனால் சந்தைப் பகுதியின் ஏனைய கட்டடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment