
நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணை யுடன் யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நேற்று நடத்திய மினி மரதன் ஓட்டப் போட்டியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கு பற்றினர்.
இதில் பாடசாலை மட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி மாணவன் எம்.தினேஷிம் பெண்கள் பிரிவில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவி எஸ்.மயூரியும் முதலிடத்தைப் பெற்றனர்.
அத்துடன் திறந்த மட்ட ஆண்கள் பிரிவில் கே.ஜெயந்தனும் பெண்கள் பிரிவில் என். மேசியும் முதலிடத்தைப்பிடித்தனர்.நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணை யுடன் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் நடத்திய மினி மரதன் ஓட்டப் போட்டி நேற்று மாலை 3 மணிக்கு யாழ். துரையப்பா விளை யாட்டரங்கில் ஆரம்பமானது.
இதில் பாடசாலை மட்டம், திறந்த மட்டம் என இரண்டு மட்டங்களில் ஆண்கள், பெண் கள் பிரிவுகளாக நடத்தப்பட்டது.இதற்காக நேற்றுப் பிற்பகல் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர் .எனினும் பதிவு செய்தவர்களைவிட மேல திகமாக வந்தவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆரம்பமான போட்டிகளில் 5 ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.பொலிஸார் இராணுவத்தினரின் வீதி ஒழுங்கு படுத்தல்களுடன் மிக நீண்ட வரிசையில் வீரர்கள் மினி மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் பாடசாலை மட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி மாணவன் என்.தினேஷ் (வயது 19) 39 நிமிடங்கள் 4 விநாடிகளில் தூரத்தைக்கடந்து முதலிடத்தையும் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் ஏ.ஜீவன்ராஜ் (வயது 18) தூரத்தை 40 நிமிடங்கள் ஒரு விநாடிகளில் ஓடி முடித்து இரண்டாமிடத்தையும் வல்வெட் டித்துறை விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் பி.ஜசிகன் 40 நிமிடங்கள் 5 வி நாடிகளில் தூரத்தைக்கடந்து 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
பாடசாலை மட்ட பெண்கள் பிரிவில் உரும் பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவி எஸ்.மயூரி (வயது 16) முதலாமிடத்தையும் அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவி ரேவதி இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
திறந்த மட்ட ஆண்கள் பிரிவில் கே.ஜெயந்தன் முதலாமிடத்தையும் எஸ்.ஜெகதீஸ்வரன் இரண்டாமிடத்தையும் பெண்கள் பிரிவில் என்.மேசி முதலாமிடத்தையும் என்.சுமதி இரண்டாமிடத்தையும் எஸ்.அனுசியா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
நீண்டகாலத்திற்கு பின்னர் யாழ். மாவட் டத்தில் இடம்பெற்ற வடமாகாண மட்ட பெரும் மரதன் ஓட்டம் என்பதால் ஆயிரக்கணக்கான வீர,வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வீதிகளில் ரசிகர்கள் கூடி நின்று போட்டியாளர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment