
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்க ளை முழுமையாக மீளக்குடியமர்த்தும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுடனான சந்திப்பின் போதே அவர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பில் இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு;
இலங்கையில் உள்ள சகல சமூகத்தின ரும் சமாதானத்துடன் வாழக் கூடிய நிலை யைத் தேர்தலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட மையும் வழங்கியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக அலு வலகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்து தாங்கள் ஆர்வமாகவுள்ளதாக நிரூபமா ராவ் குறிப் பிட்டுள்ள அதேவேளை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக் பாராட்டியுள்ளார் என இந்தியத் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment