
30 வருடங்களுக்குப்பின் யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமான வாழ்வை நோக்கி நகர்ந்திருப்பதை இட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாம் பெற்ற சுதந்திரம் தமிழர், சிங்களவர், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களின் அர்ப்பணிப்புச் சிந்தனைகளினால் கிடைக்கப்பெற்ற ஒன்றாகும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரி வித்தார்.
நேற்று யாழ். சிவில் நிர் வாகக் காரியாலயத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
சுதந்திரத்திற்காக பாடுபட்ட இலங்கை தேசிய சங்கமும் அதில் அங்கம் வகித்த சேர் பொன் இரா மநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் போன்ற செம்மல்களின் அர்ப்பணிப்பும் போற்றப் பட வேண்டியது.
ஒரே தேசத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத் தவும் தெற்காசியாவில் இலங்கை முன்னிலை நாடாகவும் திகழ மக்களாகிய நாம், அழிவுப் பாதையி லேயே இட்டுச் செல்கின்ற இன, மத, பேத எண்ணக் கருத்துக்களை மறந்து செயற்பட்ட காலம் ஆகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக் தலைமையில் ஒரே நேரத்தில் சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது. பயங்கரவாத நிலைமைகளினாலும், வெடி குண்டுகளாலும் உயிர்களை யிழந்த இலங்கை மக்களாகிய நாம் அவ்வாறான ஒரு யுத்தத்தை முடிபுக்கு கொண்டு வந்துள்ளோம்.
30 வருடங்களுக்கு மேலாக குறிப்பாக 1971 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை நாட்டின் ஒரு மைப்பாட்டினையும் தேசிய உணர்வுகளை சீரழிக்கின்ற ஆயுதக் கலாசாரத்தையும் முடிபுக்கு கொண்டு வந்துள்ளோம்.
இவ் நோக்கில் உயிர் இழந்த சிங்கள, தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஆயிரக்கணக்கில் அடங் குவர் அவயங்களை இழந்து வலுவிழந் தவர்கள், கணவர்மாரை இழந்து பரிதவிக்கும் விதவைகள், பெற்றோரை இழந்த சிறார்கள் ஆகியோரும் இவ் சமூகத் தில் அதிகமானோர் காணப்படுகின்றனர். இந்த நிலை மையை முடிபுக்கு கொண்டு வரு வதற்கு எங்களு டன் செயற்பட்டவர்கள் பெருமைக் குரியவர்கள்.
இன,மத வேறுபாடுகளை மறந்த எல்லோ ரையும் கட்டியணைக்கக்கூடிய ஊடகமாக மொழி முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இதற்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் பிரயோகித்து குறுகிய அரசியல் நோக்கங்களை அடையும் முயற்சி முடிபுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரேமக்கள் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் வடக்கின் வசந்தம் என்ற சொத்தை அபி விருத்தி செய்வதற்கு யாழ்ப்பாண மக்கள் முனைப்புடன் உள்ளார்கள்.
இராமாவில் கைதடி போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் மக்களின் வசதி களையும் மீள்கட்டுமானம் செய்வதற்கும் வெடிகளை அகற்றி மீள்குடியேற்றுவதற்கும் அவர்களுக்கான வீடுகளை கட்டியயழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக இலங்கை பாதுகாப்பு தலைமைச் செயலகமும் யாழ். கட்டளைத் தளபதியும் விரைவாக செயற்படவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தெருப்போக்கு வரத்து சாவடிகளும் சிறு சோதனைச் சாவடிக்களும் குறைக் கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதி உயர் பாதுகாப்பு நிலையங் களில் உள்ள வீடுகள் பயிர்ச்செய்கை நிலங்கள் போன்றன மக்களுக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டு உரித்தாக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலை மக்களின் சேவைக்காக அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினை களை நீக்கவும் பாதுகாப்பு இடையூறுகளை நீக்கவும் இலங்கை அரசும் பாதுகாப்பு அமைச்சும் நடை முறைகளை வகுத்துள்ளது. தமிழ் மக்களை பூர்வீக பிரஜைகளாக்கவும் இளைஞர் சமுதாயத்தை இவ் நிலையில் உருவாக்குவும் நிகழ்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என இராணுவத்தளபதி ஜெத்ஜெயசூரியா மேலும் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment