நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

வீதிகளை அகலமாக்குவது குறித்து விசேட ஆராய்வுக் கூட்டம்

Wednesday, March 10, 2010

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் உள்ள 12 வீதிகள் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பலாலி-யாழ்ப்பாணம், யாழ்ப் பாணம்-பருத்தித்துறை வீதி, புத்தூர் மீசாலை வீதி, யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை வீதி ஆகியன வீதியின் மையப்பகுதியில் இருந்து இருபகுதியையும் 50 அடி அகலமாக்குவதில் பல்வேறுமட்ட தரப்புக்களால் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இதற்கமைய யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியில் வீதி அபிவிருத்தியை மிக விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்பதற்கமைய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஷ் தலைமையில் நேற்று மாலை யாழ். மாவட்டச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

இவ் கலந்தாய்வுக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் மோரூஸ் மரியதாஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் வி.சுதாகர், நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ். சிவனேசராசா, எஸ். ராதாகிருஷ்ணன், பொறியிய லாளர் திருமதி கூல், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, வர்த் தகசங்க பிரதிநிதிகள், பிரதேச செயலக செயலாளர்கள்,பிரதேசசபைச் செயலாளர்கள், இந்துமாமன்ற பிரதிநிதிகள், அரசசார் பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
காங்கேசன்துறை வீதி, பலாலி வீதிகளில் காணப்படுகின்ற அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படாமல் வீதி அபிவிருத்தி மேற் கொள்ளப்படவேண்டும் என சில தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட போதும் இதற்காக மாற்று செயற்திட்டங்களை முன்வைத்து வீதி அகலமாக்கப்பட்டு அபிவிருத்தியை முன் னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு பிரதான வீதிகளில் பாதிக்கப்படுகின்ற நிறுவனங்களுடன் கலந் தாலோசித்து வீதி அகலமாக்கப்படுவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என யாழ். அரச அதிபர் க.கணேஷ் அறிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment