நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்.நகரில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர போட்டி கைகலப்பு வரை.....

Wednesday, March 10, 2010

யாழ்.நகரில், தென்பகுதியிலிருந்து வரும் பிரபல வர்த்தக நிறுவனங்களின் ஏட்டிக்குப் போட்டியான முறையில் மேற்கொள்ளப்படும் விளம்பர நடவடிக்கைகள் கைகலப்புவரை செல்லத் தொடங்கியுள்ளன.
யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் நவீன சந்தைக் கட்டடப் பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த பகுதியிலுள்ள சுவர்களில் ஏற்கனவே ஒட்டப்பட்ட விளம்பரச் சுவரொட்டிகளை கிழித்து விட்டுப் பிறிதொரு நிறுவனத்தினர் தமது விளம்பரங்களை அங்கு ஒட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு விரைந்த மற்றைய நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகள் ஏன் இந்த விளம்பர சுவரொட்டிகளை கிழித்தெறிகிறீர்கள்? என்று அதட்டிக் கேட்டனர்.

இதன் போது இரண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்புவரை சென்றது. இதனால் பொதுமக்களும் வேடிக்கை பார்க்க வீதியில் குவியத் தொடங்கினர்.

உடனே அங்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு நிறுவனப் பிரதிநிதிகளையும் சமாதானப்படுத்தி விட்டுச் சென்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment