யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, வடலியடைப்பில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் 4 வயது சிறுமி பலியானார். புவனேந்திரன் ரொசானி என்ற சிறுமியே சம்பவத்தில் பலியானார்.
பொலிஸாரின் சோதனை சாவடியை தவிர்த்து செல்வதற்காக உந்துருளியில் பயணித்த இருவர், ஒழுங்கை ஒன்றில் தமது உந்துருளியை அவசரமாக செலுத்தி சென்ற போது, குறித்த சிறுமியை உந்துருளி மோதிச் சென்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது மாலை நேரமாகையால், வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் முன்னர் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உந்துருளியில் பயணித்தோர் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment