யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகிக்கும் அலுவலகம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் அமைக்கவுள்ளது.
வடபகுதி மக்கள் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிள்ளதைக் கருதில் கொண்டே யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு செயலகம் ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் அபயகோன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மாத்தறை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் கடவுச்சீட்டு செயலகங்கள் இயங்கி வருகின்றன.
அதுபோன்றே யாழ்ப்பாணத்திலும் செயலகம் ஒன்றை திறந்து துரிதமாக கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடவுச்சீட்டுக்களின் தரத்தை அதிகரிக்கும் வகையில் சிறிலங்கா கடவுச் சீட்டுக்களில் விரல் ரேகை பதிவு போன்ற நவீன அம்சங்கள் பலவற்றையும் தாங்கள் கொண்டுவரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
-
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் காலி,
மாத்தறை, அனுராதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.
4 years ago
0 கருத்துரைகள்:
Post a Comment