
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று அரசை அமைக்குமாக இருந்தால் அதன் தலைமையிலான அரசாங்கமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்கும்.
ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைமையிலான மகிந்த அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்குமென எதிர்பார்ப்பது பகல் கனவாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் சிறிகஜன் உட்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
நேற்று கந்தர்மடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந் திப்பும் கொள்கை விளக்கம் வெளியிட்டு வைப்பும் இடம்பெற்றபோது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான திருமதி விஜயகலா மகேஸ்வரன், சிறிகஜன் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அங்கு அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் மக்கள் தலைவன் அமரர் மகேஸ்வரன் அணியில் இணைந்து நாம் போட்டியிடுகின்றோம்.
கட்சிகளின் எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அர சாங்கம் இன்று 13-வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வைக் காண்பதற்குத் தயாராக இல்லை. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி; ஜாதிக உறுமய ஆகிய கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன.
இதனை விட இனப்பிரச்சினைக்கான தீர்வி னைத் தயாரிக்க அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின்அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி தீர்வினை முன்வைக்கும் என எதிர்பார்ப்பது பகல் கனவாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதம ருமான ரணில் விக்கிரமசிங்கவே சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திப் பேச்சுவார்த்தையி னை ஆரம்பித்தார்.
ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வைக் காணவும் இணக்கம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். இத்த கைய தீர்வினை ஐக்கிய தேசியக் கட்சியி னால் மாத்திரமே வழங்க முடியும்.
- யாழின் அபிவிருத்திக்கு உதவி அளிக்கப்படும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், சிறு கைத் தொழிலாளர்கள், பனை-தென்னை அபிவிருத்திசங்கத்தினர், தனியார் ஊழியர்கள், அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வேலையற்ற பட்டதாரிகள் உட்பட பலதரப்பட்டவர்களும் பல்வேறு பிரச்சி னைகளையும் சந்தித்து வருகின்றனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். யுத்தத்தில் பலியான மக்களின் உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. உறவுகளை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ள மக்களின் துயரங்களை நாம் அறிவோம்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடி யேற்றப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிவாரணங்கள் வழங்கப்படுவதுடன் மீள் குடியேற்றப்படாது முகாம்களில் தொடர்ந்து வாழும் மக்கள் அடிப்படை வசதிகளுடன் மீள் குடியேற்றப்பட வேண்டும்.
தமிழ் மக்களை வாட்டி வதைக்கப் பயன் படுத்திய அவசர காலச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை நீக்க வேண்டும். யுத்தம் முடிபடைந்துள்ள நிலையில் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியதன் அவ சியம்தான் என்ன?
அவசர காலச் சட்டத்திற்கு எதிராக அன்று மகேஸ்வரன் குரல் கொடுத்தார். எனவே ஐக் கிய தேசியக் கட்சியினாலேயே இந்தச் சட்டங் களை நீக்க முடியும்.
- கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்தப்படும்
சரணடைந்த போராளிகள் மற்றும் கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்பட வேண்டும். கைதாகியுள்ளவர்களும் சரணடைந்தவர்க ளும் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே இவர்களின் கஷ்டங்கள் போக்கப்பட வேண்டும்.
எனவே இவர்களின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படும். சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி பல தடவைகள் உண்ணா விரதப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடந்த சில வருடங்களில் பல நூற்றுக் கணக் கான தமிழர்கள் கடத்தப்பட்டதுடன் பெருமள வானோர் காணாமல் போயுள்ளனர்.
பெருமளவானோர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு அமைக்கப்படும். கடத் தப்பட்டு மற்றும் காணாமல் போனோரது பெற்றோர், உறவினர்கள் படும்பாடுகளை நாம் உணர்வோம்.
படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்போம்.
யாழ்.குடாநாட்டில் உள்ள மதஸ்தலங்களின் அபிவிருத்திக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். யாழ்.குடாநாடு விவசாயத்தில் தன்னிறைவினைப் பெற்றிருந்தது. அந்த நிலையினை மீண்டும் ஏற்படுத்தப் பாடுபடுவோம்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எவ்வித பிரச்சினையுமின்றி நாட்டுக்கு வந்துபோகும் நிலையினை ஏற் படுத்துவதுடன் அதன் மூலம் எமது உறவுக ளின் முதலீடுகளை அதிகரித்து யாழ்.குடா நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுவோம்.
அபிவிருத்தி என்ற போர்வையில் ஒரு சிலர் இலாபம் உழைக்கும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் சகலருக்கும் சமபங்கினை வழங்குவோம். குடாநாட்டு மக்களின் தேவைகளை அறிந்து நாம் சேவையாற்றக் காத்திருக்கின்றோம்.
0 கருத்துரைகள்:
Post a Comment