நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய மக்களைச் சந்தித்தனர் கத்தோலிக்க ஆயர்கள்

Wednesday, March 10, 2010

சிறிலங்காவின் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் போருக்குப் பின் மீள்குடியேறிய அகதி மக்களை 6 பேர் கொண்ட கத்தோலிக்கக் ஆயர் குழுவினர் சந்தித்து அவர்கள் மனக்குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினர்.

இக்குழுவினர் தாங்களாகவே மக்களிடம் சென்று தங்கள் வாழ்க்கையை மீண்டும் புணரமைப்பதில் அவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டறிந்தனர்.

கிளிநொச்சி, முழங்காவில், விடத்தல்தீவு, இரணமடு பகுதிகளை சுற்றிப் பார்த்த இக்குழுவினர் அங்குள்ள மக்களுக்கு தேவைப்படும் இரு சக்கர வண்டிகள்
[Bicycles], சூரிய மற்றும் எண்ணெய் விளக்குகள், பள்ளி சிறுவர்களுக்கு தேவைப்படும் சீருடைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3 .5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினர்.

சிறிலங்க ஆயர்களின் பேரவைத் தலைவர் ஆயர் வியன்னே பெர்னாண்டோ மற்றும் தேசிய கத்தோலிக்க அமைப்பின் நீதி, அமைதி, மற்றும் மனித வள மேம்பாட்டு தலைவர் பேராயர் ஹரோல்ட் அந்தோணி பெரேரா ஆகியோரும் உடனிருந்தனர்.

கிராமப்புற பகுதி மக்கள் தாங்கள் போரின் போது இழந்த உடைமைகளான படகு மற்றும் விவசாய கருவிகளை மீண்டும் பெற விரும்புவதாக இக்குழுவில் இருந்த கரிடஸ் மனித மேம்பாட்டு நிலையத்தின் தலைவர் மற்றும் கத்தோலிக்க மதகுருவான கிறிஸ்டோபர் ஜார்ஜ் ஜெயகுமார் தெரிவித்தார்.

முக்கியமாக சைவ மற்றும் கத்தோலிக்க மக்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் வேலை வாய்ப்புக்களுக்காக போராடுவதாகவும், இறப்பு சான்றிதழ் உட்பட்ட அரச பதிவு ஆவணங்களை பெறுவதிலும் இவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண ஆயர் தாமஸ் செளவுந்தரநாயகம், இரத்னபுர ஆயர் கிளேடுஸ் சி. பெரேரா, சிலாபம் ஆயர் வலேன்சே மென்டிஸ் மற்றும் பதுளை ஆயர் வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த பிற பிரதிநிதிகளாவர்.

அண்மையில் மன்னார் பகுதியை சுற்றிப்பார்த்த மற்றுமொரு ஆயர் நோர்பேர்ட் அன்றடியை தலைமையாகக் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ராணுவ மற்றும் அரசு உயர் அதிகாரிகளை தாங்கள் சந்தித்து பேசியதாக கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

அவர்கள் வாழ்க்கையை மீண்டும் புனரமைக்க தேவையானவற்றை தேவாலயங்கள் செய்யும் என்ற உறுதியை தாங்கள் தமிழ் மக்களிடம் அளித்ததாக ஆயர் நோர்பேர்ட் அன்றடி குறிப்பிட்டுள்ளார்.

கரிடஸ் சிறிலங்கா என்ற மனித மேம்பாட்டு அமைப்பும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாக அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் போரில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப் பட்டாலும் உள்நாட்டு போரினால் ஏற்பட்ட இன்னல்களை மக்கள் இன்னும் அனுபவித்து வருவதாகவும் 200,000 மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பி வந்து பார்த்த போது அவர்கள் வீடுகள் 90 சதவீதம் அழிக்கப்பட்டு விட்டதாக கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இன்னும் பலர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அகதி முகாம்களிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment