விடியற் காலையில் நான் கொழும்பை விட்டுப் புறப்பட்டிருந்தேன். ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பஸ்தியான் விடுதியில் தங்குவதற்காக அங்கு நான் நுழைந்த போது பொழுது சாயும் வேளையாகி இருந்தது.
இந்தப் பயணத்தின் போது ஏற்றி விடப்பட்டிருந்த உறுதியான கார்க் கண்ணாடிகளின் வன்மம் காரணமாக படை படையாய் செம்புழுதி என் மீது படிந்திருந்தது.
நான் வடக்கே செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற்றிருந்தேன். கொழும்பில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த இந்த நகரத்தை வந்தடைய 12 மணி நேரம் பிடித்துள்ளது.
யாழ். நகரம் ஒரு ஞாயிற்றுக் கிழமை போல சோம்பேறித் தனத்துடன் இருந்தது. சந்தைகள் மூடப்பட்டிருந்தன. சிவப்புக் கூரைகளுடனும் முன்புறத்தில் சிறிய புந்தோட்டங்களுடனும் நின்றிருந்த அழகான வீடுகளில் இருந்து தொலைக்காட்சித் சத்தங்களும் சாம்பிராணிக் குச்சியின் வசந்தமும் வந்துகொண்டிருந்தன.
இவ்வாறு எழுதியுள்ளார் Hindustan Times ஏட்டின் செய்தியாளர் Sutirtho Patranobis.
Sutirtho Patranobis மேலும் எழுதியுள்ளதாவது:
இந்தக் காட்சிகள் எல்லாம் அடுத்த நாள் காலையில் வியக்கத்தக்க வகையில் மாற்றமடைந்தன.
துவிச்சக்கர வண்டிகளில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளாலும் உந்துருளிகளில் வேலைக்குச் செல்வோராலும் நிறைந்த யாழ். நகரத்து வீதிகள் காலையிலேயே உயிர் பெற்றிருந்தன.
உந்துருளியில் சென்றவர்களில் பலர் பெண்கள். பெரிய தலைக்கவசத்தை அவர்கள் அணிந்திருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment