
தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியளிப்பில் நிகொட்-02 இற்கு ஊடாக மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான வாழ் வாதாரக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;அரச உத்தியோகத்தர்கள் தவிர்ந்த 30. 04.2009 ஆம் திகதி தொடக்கம் 31.10.2009 ஆம் திகதி வரை மீளக்குடியமர்ந்த தகுதியு டைய 16 ஆயிரத்து 831 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவு தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இக் கொடுப்பனவுகள் யாவும் மார்ச் மா தம் 27 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதால் இக் கொடுப்பனவுக்குத் தகதியுடைய மீளக் குடியமர்ந்த குடும்பங்கள் இன்றுவரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தவறியிருப்பின் உடனடியாகக் கொடுப்பனவு தொடர்பான விண்ணப்பத்தை கிராம சேவையாளரிடம் பெற்றுப் பூர்த்தி செய்து கிராம சேவையாளரது சிபார்சுடன் தங்கள் பிரதேச செயலாளரிடம் அல்லது உதவி அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
கொடுப்பனவு வழங்கவுள்ள குடும்பங்களுக்கான அனுமதிக் கடிதம் மார்ச் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து பிரதேச செயலாளர்; உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியாகவும் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாகவும் வழங்கப்படவுள்ளது.
சகல தகுதியுடைய மீளக் குடியமர்ந்த குடும்பங்கள் தவறாது தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்பு அத்தாட்சி சான்றித ழுடன் எங்களால் பின்னர் அறிவிக்கப்படும் பிரதேச செயலகத்திலோ உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ சென்று உறுதிச் சீட்டில் கையயாப் பத்தையிட்டுக் கடிதத்தைப் பெற்று வங்கியில் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட் டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
31.10.2009 ஆம் திகதிக்குப் பின் மீளக் குடியமர்ந்த குடும்பங்களுக்கும் வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்க ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் க.கணேஷ் அறிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment