நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ் மக்களின் வளங்களை சுரண்டும் முயற்சி: தென்னிலங்கை கட்சிகளும், வர்த்தகர்களும் போட்டி

Wednesday, March 3, 2010

தென்னிலங்கை வர்த்தகர்களும், அரசியல் கட்சிகளும் யாழ்பாண மக்களின் வளங்களை சுரண்டும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ் நகரத்தின் வீதிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுடன் தென்னிலங்கை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ள அதே சமயம் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு மற்றும் ஊர்காவற்துறை பகுதிகளில் சிங்கள வர்த்தகர்கள் மதுபானக்கடைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழில் போட்டியிடும் நோக்கத்துடன் களமிறங்கியுள்ள தென்னிலங்கை கட்சிகளும், தமிழ் உதிரிக்குழுக்களும் யாழ் மக்களிடம் நிதி உதவிகோரி கோரிக்கைகளை விடுத்து வருகின்றன.


தென்னிலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.காவின் யாழ்மாவட்ட அமைப்பாளர் நிதி உதவிகோரி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளாதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment