நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன்- யாழில் ஆனந்தசங்கரி

Tuesday, March 2, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக் காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பல கஷ்டங்கள், துன்பங்க ளிலிருந்து மீண்டு இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக்கூடிய நிலையில் நிம்மதியைத் தேடி நிற்கும்போது பல கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இவ்வாறு களத்தில் உள்ள சில கட்சிகள், சுயேட்சைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு ஏதோ ஒரு சக்தி தூண்டுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று நண்பகல் நடை பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்ததாவது;

தமிழ் மக்கள் பல துன்பங்கள், கஷ்டங்களை அனுபவித்து இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலை ஏற்பட்டு நிம்மதியைத் தேடி நிற்கின்றனர்.இந்த நிலையில் நடைபெறப் போகும் தேர்தலில் மக்களின் நிலையைக் குலைக்கும் வகையில் பலர் தேர்தல் களத்தில் குறித்துள்ளனர்.

இதில் ஒரு சில கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தவிர்ந்த ஏனையவை ஒரு சக்தி யின் தூண்டுதலிலேயே போட்டியிடுகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் இந்த நிலை ஏற் படுமா? புலிகள் இல்லை என்பதாலேயே இல்லை. அதனாலேயே இவ்வாறு பலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் எனக் கூறுவது தவறு.

யாழ்.மாநகர சபைத் தேர்தலின்போது யாழ்ப்பாணப் பத்திரிகைகள் தீமூட்டப்பட்டன. ஜனாதிபதித் தேர்தலின்போது பல குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றன. தற்போது கட்சி அலுவலகம் மீது கல் வீச்சு இடம்பெற்றது.

இவையயல்லாம் எடுத்துப் பார்க்கும் போது இன்னொரு சக்தி யாழ்ப்பாணத்தில் உள்ளது. அது மக்களுக்குப் புரியும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந் தால் விடுதலைப்புலிப் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன்.

ஏனென்றால் அவர்களும் எமது பிள்ளை கள்தானே. பலர் தமது பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு மற்றவர்களின் பிள்ளைகளைக் காப்பாற்றாமல் மெளனமாக இருந்து விட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ எனக்கு ஒரு தடவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடக்கு மாகாண ஆளுநராக நியமித்துள்ளேன் என்றார். அதற்கு நான் ஜனாதிபதியிடம் ஒன்றைத் திருப்பிக் கேட்டேன், நான் ஆளுநரானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமா? என்று.

எனவே நான் பதவி ஆசை பிடித்தவன் இல்லை. வன்னிப் போர்க் களத்தில் மூன்று இலட்சம் மக்கள் சிக்கியுள்ளனர் என்பதை ஜனாதிபதிக்கும் சர்வதேசத்திற்கும் முதலில் நானே தெரியப்படுத்தினேன்.

அதுவரைக்கும் அரசு 85 ஆயிரம் மக்களே போர்க் களத்தில் சிக்கியுள்ளனர் என்றது. அந்தக் கட்டத்தில் காயமடைந்த, பலியான மக்களின் விபரத்தைத் தருமாறு அரசிடம் கோரினேன். அதனால் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்த்தேன்.

எனினும் அதனை அரசு மூடி மறைத்து விட்டது. பத்து வயது பெண் பிள்ளை ஒன்றை கையில் புலி முத்திரை குதித்தி புனர்வாழ்வு முகாமில் வைத்து பாடசாலைக்கு அரசு அனுப்பியது.

அதனை நான் தடுத்து அந்தப் பெண் பிள்ளையை விடுவித்தேன். அத்துடன் வன் னியில் மக்கள் பட்ட கஷ்டங்களை கூற சந் தர்ப்பம் வழங்குங்கள் என அரசிடம் கேட் டேன்.

அதனையும் அரசு நிராகரித்து விட்டது. காரணம் அரசின் கெடுபிடிகளையும் மக்கள் வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதற்காகத் தான். இதற்கு மேலாக ஜாதிக யஹல உறுமய உள்ளிட்ட பேரினவாதக் கட்சிகள், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்துத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விவாதித்துள்ளேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment