நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாண உற்பத்திகள் தம்புள்ள சந்தையில்: தெற்கில் மரக்கறி விலை சரிகின்றது

Friday, March 12, 2010

யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்திப் பொருட்கள் தென்பகுதிக்குக் கொண்டுவர ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தெற்கின் முக்கிய சந்தையான தம்புள்ளவில் மரக்கறிகளின் விலைகள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன.

தம்புள்ள பொருளாதார நிலையத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து தொன் கணக்கில் மரக்கறிகளும் பழங்களும் வந்து குவிவதால் ஏற்கனவே சில மரக்கறிகளின் விலை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது என்றார்.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மீன், மரக்கறி, அரிசி மற்றும் பழங்கள் என்பன ஏ-9 பாதை வழியாக ஒவ்வொரு நாளும் தம்புள்ளக்கு லொறிகளிலும் ட்ரக்குகளிலும் அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

இப்போது அறுவடைக் காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக பீட்ரூட், உருளைக் கிழங்கு, சின்ன வெங்காயம், வாழைப்பழம் என்பன ஒவ்வொரு நாளும் தம்புள்ள சந்தைக்குப் பெருமளவில் வந்து சேர்கின்றன.

இதன் காரணமாக, மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. பீட்ரூட் 80 ரூபாவில் இருந்து 45 ரூபாவாகவும் உருழைக்கிழங்கு 120 ரூபாவில் இருந்து 55 ரூபாவாகவும் சின்ன வெங்காயம் 80 ரூபாவில் இருந்து 45 ரூபாவாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கப்பல் வழைப்பழத்தின் விலை கிலோ ஒன்றிற்கு 110 ரூபாவில் இருந்து 65 ரூபாவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment