யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்று அமைக்க சிறிலங்கா அரசு உடன்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் அறிவித்துள்ளது வரவேற்க வேண்டியதே என இந்திய ஊடகமான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' தனது இணையத்தளத்தில் கருத்து எழுதியுள்ளது.
அதில் எழுதப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்ட எட்டு மாதங்களின் பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்கப்பட்டால் யாழ்பாண குடாநாட்டில் உள்ள தமிழர்களுக்கு அது உதவிகரமாக அமையும் அத்துடன் தென்னிந்தியாவுடன் அவர்கள் கொண்டுள்ள முழுமையான உறவை இது மீள தகவமைக்கவும் உதவும்.
இது உண்மையாயினும், தற்போது தமிழ்நாட்டு மக்களுடன் இருந்த மொழிரீதியான சகோரத்துவ உணர்வை அவர்கள் இழந்துள்ளனர்.
உள்நாட்டு போர் தொடங்கும் முன்பு ராமேஸ்வரம் அவர்களுக்கு படகில் எளிதில் சென்று வரும் தூரத்திலேயே இருந்தது.
போர் நடந்த கால கட்டத்திலும் அதற்கு பிறகும் இந்திய கடல் எல்லைகளுக்குள் செல்ல முடியாததால் தென்னிந்தியக் கரை அவர்களுக்கு இன்னுமொரு கிரகமாக மாறி விட்டது.
இந்த தூதரகம் அமைவதனால் வெறும் உணர்வு ரீதியான தொடர்புகளுக்கும் அப்பால் வேறு பல விடயங்களை கையாள வேண்டியது தற்போது முக்கியமாகும்.
சிறிலங்காவின் வடக்கு பகுதியினை மீள் கட்டி எழுப்புவது என்பது, பாரிய அளவிலான வளங்களையும் பல்துறை முனைப்புகளையும் வேண்டி நிற்கும் சவாலாகும்.
அங்குள்ள தமிழர்கள் தங்கள் வாழ்வை மீளத் தொடங்குவதற்கு அவர்களுக்கு அனைத்து துறைகளிலும் நிபுணத்துவமும் மிக அதிமான உதவிகளும் அவசரமாக அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
விடுதலைப்புலிகளின் அழிவிற்கு பிறகு கொழும்பு பெறுமதியான சிறு உதவிகளை மட்டும் செய்துள்ளது.
புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் நிறைவு பெற்ற பின்னர்தான் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்படுமென அதிபர் ராஜபக்ச மீளவும் மீளவும் கூறி வருகிறார்.
அதே நேரத்தில் இதற்கான உதவிகளை உலகின் வேறெந்த நாடுகளும் அளித்ததற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
ஒருவேளை தற்போதுள்ள குழப்பமான நிலையில் இருந்து ஒரு தெளிவான விடயங்கள் வெளிப்படின் இவர்களுடைய நிலைப்பாடு மாறலாம் அதுவரை இந்தியாவே பெருமளவு பொறுப்புகளை சுமக்க வேண்டி இருக்கும்.
இந்த நோக்கத்திற்காக அங்குள்ள தேவைகளையும் முன்னுரிமைகளையம் சரியாக மதிப்பிடும் பொருட்டு இந்தியாவினுடைய உத்தியோகபூர்வ பிரசன்னம் அங்கு அவசியமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானின் மீள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தியா தனது பல எண்ணிக்கையிலான துணைத் தூதரகங்களை கொண்டிருப்பது புதுடெல்லிக்கு அங்குள்ள நிலமைகளை கண்காணிப்பதற்கான வாய்ப்பாக உள்ளது என்பதனை குறைத்து மதிப்பிட முடியாது.
போர் முடிவுக்கு வந்திருந்தாலும் கூட அங்குள்ள சிங்களவர்களும் மற்றும் தமிழர்களும் ஒருவர்மீது ஒருவர் இன்னமும் மிக ஆழமான நம்பிக்கையீனங்களை கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள இன வெறி மீண்டும் எந்த நேரத்திலும் இலகுவில் மேலெழலாம்.
துணைத்தூதரகம் அமைக்கபடுவதான செய்தி இணைய செய்தித் தளங்களில் மிக எரிச்சல் உணர்வுடன் எதிரொலிக்கப்படுகின்றது.
அடுத்த விடயமாக நாடாளுமன்றத்திற்கும் அதற்கு வெளியேயும் உள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் தங்கள் எதிர்காலம் பற்றிய தெளிவற்ற நிலையையே கொண்டுள்ளார்கள்.
வரலாறு எப்படி அமைந்தாலும் எதிர்கால அமைதியை உருவாக்கும் பொறுப்பில் இந்தியாவின் பாத்திரம் மிக முதன்மையானதாகும்.
ஆதலால், யாழ்பாணத்தில் இந்தியாவின் பிரசன்னம் தனக்குரிய எல்லா தார்மீக நியாயங்களையும் கொண்டுள்ளது.
17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
-
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் காலி,
மாத்தறை, அனுராதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.
4 years ago
0 கருத்துரைகள்:
Post a Comment