நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாணப் பாதுகாப்பு விரைவில் தளர்த்தப்படும்

Monday, March 1, 2010

யாழ்.மாவட்டத்தில் தற்போது அமுலிலுள்ள உயர் பாது காப்பு வலயம் உட்பட பாதுகாப்பு நடைமுறைகளை முற்றாகத் தளர்த்தி தென்பகுதி மக்கள் போன்று இங்கும் மக்களின் சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்துவேன் என யாழ்ப்பாண புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அடுத்த சில தினங்களில் ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு சபையுடன் கொழும்பில் பேச்ளசுவார்த்தை நடத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நெஸ்ரில் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு யாழ்.நகரில் நடை பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட் டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 30ஆண்டுகள் நடை பெற்ற போர் முடிபுக்கு வந்ததன் பின்பு தென்பகுதி மக்கள் எவ்வாறு சுதந்திரமாக இருக்கின்றார்களோ அதேபோன்று யாழ்ப்பாண மக்களும் இருக்க வேண்டும்.
ஒரேநாடு, ஒரே மக்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தெரிவித்த கொள்கையே என்னிடமும் உண்டு. கடந்த காலங்களில் யாழ்.மாவட்ட மக்கள் பல துன்பங்களை எதிர்நோக்கினர்.

ஆனால் தற்போது சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் தெல்லிப்பழை மாவட்ட வைத்திய சாலையை அடுத்த வாரம் முதல் பழைய இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.இதனால் முன்பிருந்தது போன்று புற்று நோய் சிகிச்சைப் பிரிவு, உள நலவைத்தியப் பிரிபு என்பன சீராக இயங்கும்.

இதற்குமேலாக உயர் பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை படிப் படியாக நீக்கி மக்களை மீள் குடியேற்ற வேண்டும்.கடந்த 1981ஆம் ஆண்டு நான் பார்த்த பூநகரிக்கும் தற்போதைய பூநகரிக்கும் பாரிய மாற்றமுள்ளது. அது போரினால் அழிவடைந்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு பெருமளவு தென்பகுதி மக்கள் வரு கிறார்கள்.எனினும் மொழிப்பிரச்சி னைகளால் யாழ்.மக்களை சமாளிப் பது கடினமாகவுள்ளது.அதுமட்டுமே வேறுபாடாகவுள்ளது.எனினும் சம மாக வாழும் போது அவ்வாறான நிலை ஏற்படாது.

யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக் கப்படும் அபிவிருத்திக்கு இராணுவத்தினரால் எவற்றை செய்யமுடியுமோ அதற்கான சகல உதவிகளையும் முழுமையாக வழங்குவேன் என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இதேவேளை தெல்லிப்பழை உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று முதல் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் இயங்க ஆரம்பித்துள்ள தாகவும், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பஸ் சேவை கீரிமலை வரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment