நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாண-தமிழக மீனவர்கள் சந்திப்பு நிறுத்தம்

Monday, March 1, 2010

கச்சதீவில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழாவின் போது தமிழக மற்றும் யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது பின்னர் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் திருவிழாவின் போது தமிழக மீனவர்களுக்கும், யாழ்ப்பாண மீனவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று திட்டமிட்டிருந்தது.ஆனால் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக அதுபின்னர் கைவிடப்பட்டுள்ளது. எமக்கு இடையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என நாம் கருதினோம்.

ஆனால் அதனை மேற்கொள்ள முடிய வில்லை என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.எனினும் தமிழக மீனவர் சங்கத்தலைவர் அருளானந்தத்துடன் நாம் தொடர்ந்து தொடர்புகளை பேணி வருகிறோம். எனவே நாம் விரைவில் சந்திப்புக்களை மேற்கொள் வோம்.

அருளானந்தம் சந்திப்பை மேற்கொள்ள ஆவலாக இருந்தார். ஆனால் இந்திய அரசு அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதும் கச்சதீவில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து 40 படகுகளில் ஆயிரம் மீனவர்களும், தமிழகத்திலிருந்து 200 படகுகளில் 5 ஆயிரம் மீனவர்களும் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment