யாழ் வர்த்தக சங்கத்தினால் நடத்தப்படும் மாபெரும் கண்காட்சி எதிர்வரும் 27,28, 29 ஆம் திகதிகளில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் ,யாழ் மத்திய கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் இலங்கையில் உள்ள பெரிய உற்பத்தி நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், சந்தைப்படுத்துவோர் என பல நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளன.
இக்கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு தேவை யான இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. உடனடியாக வந்து தங்களுக்குரிய இட ஒதுக் கீடுகளை பெற்றுக் கொள்ளுமாறு யாழ் வர்த்தக சங்கத்தினரால் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான சலுகைக் கட்ட ணமாக 5 ஆயிரம் ரூபா மட்டுமே அறிவிடப்படுவதாகவும் குறிப்பிடப் டுகிறது.
மேலும் இக்கண்காட்சியில் மாலை நிகழ்வுகளாக மாலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை யாழ்ப்பாண கலாசாரத்தை பின்னணியாக கொண்ட கலை நிகழ்ச்சிகள் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
1 கருத்துரைகள்:
I am really surprised by the quality of your constant posts.You really are a genius,
December 10, 2021 at 1:25 AMI feel blessed to be a regular reader of such a blog Thanks so much..
Ready to Move Flats in Belapur
Post a Comment