Saturday, March 20, 2010

யாழ். வட்டுக்கோட்டையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டை பகுதியில் கள்ளுத் தவறணையில் கைக்குண்டுடன் நின்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை – மூளாய் வீதியில் அமைந்துள்ள கள்ளுத் தவறணை ஒன்றில் கைப்பையுடன் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நின்றிருந்தார்.

அச்சமயம் மது பரிசோதனைக்காக அங்கு வந்திருந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இவரிடம் கைப்பையில் கசிப்பு இருக்கின்றதா எனச் சந்தேகித்து பரிசோதித்த போது, அதற்குள் கைக்குண்டு ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

உடனே வட்டுக்கோட்டைப் பிரதேசபொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. உடனடியாகவே ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டதுடன் அந்நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தொல்புரம், முன்கோட்டையைச் சேர்ந்த எஸ்.மகேந்திரம் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இவர் ஏன் கைக்குண்டு வைத்திருந்தார் என்பது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment