Tuesday, March 16, 2010

யாழ். தென்மராட்சியில் வர்த்தகரின் மகனான மாணவன் கடத்தல்

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மீசாலை, மடத்தடி என்னுமிடத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகர் ஒருவரின் மகனான மாணவன் ஒருவர் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார் என யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு மூன்று கோடி ரூபா பணம் கப்பமாக வழங்கப்படவேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவராவார்.

வடபகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் இடம்பெற்றுள்ள முதலாவது கடத்தல் சம்பவம் இதுவென்றும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment